குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பூஜை நேரம் மாற்றம்


குலசேகரன்பட்டினம்  முத்தாரம்மன் கோவில்  பூஜை நேரம் மாற்றம்
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சந்திரகிரகணத்தை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வழக்கமாக காலை 6மணிக்கு நடைதிறக்கப்பட்டு 8 மணிக்கு காலை சந்திபூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிகாலை பூஜை, நண்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆனால் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு நடை சாத்தப்படும். மாலை 4மணிக்கு நடைதிறக்கப்பட்டு 5.30மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8.30 மணிக்கு ராக்கால பூஜையை தொடர்ந்து 9 மணிக்கு திருக்காப்பிடுதல் நடைபெறும். செவ்வாய், வெள்ளி இரவு 10 மணிக்கு திருக்காப்பிடுதல் நடைபெறும். ஆனால் வரும் 8-ந்(செவ்வாய்கிழமை) சந்திரகிரகணத்தை முன்னிட்டு பிற்பகல் 1.30மணிக்கு கோவில் நடைதிருக்காப்பிடப்பட்டு பின்பு இரவு 7மணிக்கு நடைதிறக்கப்படும். மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story