குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பூஜை நேரம் மாற்றம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு நடை திறப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, காலை 5.15 மணிக்கு தனுர் மாத பூஜை, காலை 8 மணிக்கு கால சந்தி பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 12.30 மணிக்கு நடைத்திருக்காப்பிடுதல் நடைபெறும். மாலை 4 மணிக்கு நடைதிறப்பு, மாலை 5 மணிக்கு சாயரட்சபூஜை, இரவு 8 மணிக்கு ராக்கால பூஜையும், இரவு 8.30 மணிக்கு திருகாப்பிடுதல் நடைபெறும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுதலுக்கு உட்பட்டது என கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story