குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடி திருவிழா
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடி திருவிழா திங்கட்கிழமை தொடங்குகிறது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் ஆடிகொடை விழா நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 3-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நாளை இரவு 8 மணிக்கு மக்காப்பு தீபாராதனை, இரவு 10 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள், காலை 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், காலை 10 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்திருத்தருளல், 11.15 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. மேலும் இரவு7 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இரவு 8மணிக்கு வில்லிசை, இரவு 9 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள், இரவு 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல் மற்றும் சிறப்பு மகுடம் குறவன், குறத்தி, கரகாட்டம் நடைபெறுகிறது. 3-ந் தேதி காலை 9 மணிக்கு சிறப்பு மகுடம், காலை 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், 11.30 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு இரவு 8.30மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. ஆடி கொடை விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையரும் தக்காருமான சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.