குலசேகரன்பட்டினம் பள்ளி மாணவிகள் சாதனை
10, 12-ம்வகுப்பு பொதுத்தேர்வில் குலசேகரன்பட்டினம் பள்ளி மாணவிகள் சாதனைபடைத்துள்ளனர்.
தூத்துக்குடி
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் வள்ளி அம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10, 12-ம்வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். 12-ம் வகுப்பு தேர்வில் ஹஸ்ரின் சாதிகா 545 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். காயத்ரி 506 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும், முத்து பிரேமா 492 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர். 10-ம் வகுப்பு தேர்வில் முத்து உஷா 444 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், முத்துசெல்வி 418 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும், சாருலதா 410 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி செயலாளர் ராமசுந்தர சுப்பிரமணியன், தலைமை ஆசிரியை ஜெயந்தி ஆகியோர் பாராட்டினர்.
Related Tags :
Next Story