குமரி மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி இடமாற்றம்
குமரி மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி மயிலாடுதுைறக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி மயிலாடுதுைறக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நீதிபதிகள் இடமாற்றம்
ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உத்தரவின்படி கீழ்கண்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் (ஆய்வு) எம்.ஜோதிராமன், சென்னை ஐகோர்ட்டின் ஜூடிசியல் பதிவாளராகவும், கடலூர் தொழிலாளர் கோர்ட்டு நீதிபதி எம்.சுபா அன்புமணி, சென்னை ஐகோர்ட்டின் பதிவாளராகவும் (மாவட்ட நீதித்துறை), நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் குற்றவியல் தலைமை நீதிபதி மாயகிருஷ்ணன், மயிலாடுதுறை குற்றவியல் தலைமை நீதிபதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் தர்மபுரி தலைமை சாா்பு நீதிபதி கோகுல கிருஷ்ணன் நாகர்கோவில் குற்றவியல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல மதுரை 1-வது கூடுதல் சார்பு கோா்ட்டு நீதிபதி ஆஷா கவுசல்யா சாந்தினி, நாகர்கோவிலில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பூதப்பாண்டி
குடியாத்தம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி கார்த்திகேயன், பூதப்பாண்டி மாவட்ட முன்சிப் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். குழித்துறை 2-வது கூடுதல் மாவட்ட முன்சிப் நீதிபதியாக இருந்த செல்வம், விக்ரவண்டி மாவட்ட முன்சிப் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டு பணியிடமாற்றம் செய்யப்பட்டள்ளார்.
இரணியல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதியான முத்து செல்வம், ஆலங்குளம் மாவட்ட முன்சிப் கோர்ட்டு நீதிபதியாகவும், குழித்துறை 1-வது கூடுதல் மாவட்ட முன்சிப் நீதிபதியாக இருந்த ஜெயகாளிஸ்வரி, சிவகிரி கூடுதல் மாவட்ட முன்சிப் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வள்ளியூர் முதன்மை மாவட்ட முன்சிப் கோர்ட்டு நீதிபதியான விஜயலட்சுமி, நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
189 நீதிபதிகள்
மன்னார்குடி 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி அமீர்தீன், இரணியல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குன்னூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதியான இசக்கி மனேஷ்குமார், குழித்துறை 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 189 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.