குமாஸ்தாக்கள் சேமநல நிதி கமிட்டி உறுப்பினர் தேர்தல்


குமாஸ்தாக்கள் சேமநல நிதி கமிட்டி உறுப்பினர் தேர்தல்
x

குமாஸ்தாக்கள் சேமநல நிதி கமிட்டி உறுப்பினர் தேர்தல்

திருப்பூர்
திருப்பூர், ஆக.26-தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் குமாஸ்தாக்கள் சேமநல நிதி கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தல் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் நேற்று நடைபெற்றது. இதில் 3 கமிட்டி உறுப்பினர் பதவிக்கு தமிழகம் முழுவதும் இருந்து 18 பேர் போட்டியிட்டனர். இதில் கோவை மாவட்டத்தில் இருந்து 2 பேர் போட்டியிட்டனர்இவர்களில் 3 பேரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நேற்று தமிழகம் முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டு பதிவு பெற்ற குமாஸ்தாக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தல் அதிகாரியாக திருப்பூர் பார் அசோசியேசன் தலைவர் பழனிசாமி பணியாற்றினார். தேர்தல் பார்வையாளராக வக்கீல் பாலகுமார் இருந்தார். அவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு நடந்தது. அட்வகேட் அசோசியேசன் தலைவர் ரகுபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் மாவட்டத்தில் 91 குமாஸ்தாக்கள் வாக்களிக்க தகுதி உடையவர்களாக இருந்தனர். 74 பேர் வாக்களித்தனர். பின்னர் வாக்குகள் அனைத்தும் கவரில் வைத்து சீலிடப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

Next Story