சென்னைய சாமி கோவில் கும்பாபிஷேக விழா


சென்னைய சாமி கோவில் கும்பாபிஷேக விழா
x

இண்டூர் அருகே சென்னைய சாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே பி.தளவாய்அள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சென்னைய சாமி கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு கொடியேற்றதுடன் விழா தொடங்கியது. இதனையடுத்து கங்கணம் கட்டுதலும், பரிவார தேவதைகளுக்கு கரிகோலம் தீபாராதனை, எஜமான சங்கல்பம், ஸ்ரீ சுதர்சன ஹோமம், குபேர ஹோமம், கோபூஜை, கஜபூஜை, வாஸ்து சாந்தி நடைபெற்றது. இதையடுத்து யாகசாலை பூஜைகள், தீபாராதனை, கலச ஸ்தாபனம், சயனாதிவாசம், வாணவேடிக்கை நடந்தன. தொடர்ந்து கோபுர கலசம் வைத்தல், எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதலும், நேற்று காலை 2-ம் கால யாகபூஜை, நாடி சந்தனம், மகா தீபாராதனை நடைபெற்றது. யாத்ரா தானம், கடம் புறப்பாடு தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீசென்னைய சுவாமி மற்றும் விமான கோபுரம் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து புண்ணிய தீர்த்தம் தெளித்து சாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story