கந்தன், பாலமுருகன், இடும்பன் கோவில் கும்பாபிஷேக விழா


கந்தன், பாலமுருகன், இடும்பன் கோவில் கும்பாபிஷேக விழா
x

நல்லம்பள்ளி அருகே கந்தன், பாலமுருகன், இடும்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே ஒட்டப்பட்டி கற்பக விநாயகர், கந்தன் பாலமுருகன், இடும்பன் கோவிலில் திருப்பணிகள் நடத்தப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 8-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை, யாகசாலை பூஜை, வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. பின்னர் மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. காலை 9.30 மணிக்குமேல் 10 மணிக்குள் கற்பக விநாயகர், கந்தன் பாலமுருகன், இடும்பன் கோவில் ஆகிய விமான கோபுர கலசங்கள் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்கார சேவை, மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஒட்டப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story