கும்பாபிஷேக விழா


கும்பாபிஷேக விழா
x

திண்டுக்கல்லில், நன்மை தரும் 108 விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் கோபால சமுத்திர கரையில், நன்மை தரும் 108 விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆசியாவிலேயே உயரமான 32 அடி மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் மற்றும் கைலாயநாதர், அண்ணாமலையார்-உண்ணாமுலையம்மன், பரிவார மூர்த்தி சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்பு பெற்ற இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா மற்றும் 55-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, கடந்த 26-ந் தேதி முதற்காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று காலை 6.30 மணியளவில் நான்காம் யாகசாலை பூஜை நடந்தது. அதன்பிறகு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

இதையொட்டி கோவிலின் கோபுர கலசம் மற்றும் அனைத்து மூலஸ்தான மூலவர் சாமி சிலைகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவர் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் அனைத்து சாமிகளுக்கும் பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களால் மகா அபிஷேகம் நடந்தது.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் தங்கரத விநாயகர், சமயபுரம் மாரியம்மன், மதுரைவீரன், கருப்பண்ணசாமி தேர் கோபால சமுத்திர கரையில் வலம் வந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story