கோவில் கும்பாபிஷேக விழா


கோவில் கும்பாபிஷேக விழா
x

மானாமதுரை அருகே பெண்ணடி பாட்டியாத்தாள் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

சிவகங்கை

மானாமதுரை,

மானாமதுரை அருகே பெண்ணடி பாட்டியாத்தாள் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

மானாமதுரை அருகே சோமநாதபுரம் கிராமத்தில் உள்ள பெண்ணடிபாட்டியாத்தாள் கோவில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி கோவில் திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் நிறைவு பெற்ற பின்னர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை, வேதபாராயணம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையுடன் தொடங்கி இரவு 10 மணிக்கு நிறைவு பெற்றது.

காலை யாகசாலை பூஜை நடைபெற்று காலை 8.30 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க கடம்புறப்பாடு நடந்தது. 9 மணிக்கு பெட்ட தெய்வ அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோவில் பாபுபட்டர் தலைமையில் அர்ச்சகர்களால் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

சுமங்கலி பூஜை

அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு கோ பூஜை, சுபாஷினி பூஜை, சுமங்கலி பூஜை, யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை ஆறுமுகம் வகையறா, ஆதிநாராயண மக்கள், நாராயணன்-ராமசாமி சுப்பையா, முத்துசேர்வை, 4 பங்காளிகளின் மக்கள், சோமநாதபுரம் பெண்ணடிபாட்டியாத்தாள் கோவில் பங்காளிகள் மற்றும் முத்தனேந்தல் சோமநாதபுரம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.



Next Story