பசவேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா


பசவேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஜெகதேவியில் பசவேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

கிருஷ்ணகிரி

பர்கூர்

பர்கூர் அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தில் பசவேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 16-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி யாகசாலை பூஜைகள், பால்குட ஊர்வலம் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று 3-ம் கால யாகபூஜை, கலச புறப்பாடு நடந்தன. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் கோவிலை சுற்றி எடுத்து சென்று கோவில் கோபுர கலசத்திற்கு ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு அபிேஷகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் மதியழகன் எம்.எல்.ஏ. மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story