பச்சை நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா அமைச்சர் பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பங்கேற்பு


பச்சை நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா அமைச்சர் பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பங்கேற்பு
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:15:41+05:30)

பச்சை நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பங்கேற்றனர்.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே பிரான்மலை மதகுபட்டியில் கருங்கல் கருப்பர் ஸ்ரீபச்சைநாச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவிற்கு பொன்னம்பல அடிகளார் தலைமை தாங்கினார். கணபதி ஹோமத்துடன் முதல் கால பூஜை தொடங்கியது. முதல் கால பூஜையில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு புனித நீர் அடங்கிய கலசத்தை வழிபட்டார். காலை 10.20 மணியளவில் விமானத்திற்கும் மூலவருக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story