விழுப்புரம் பாப்பான்குளம் சுந்தர மகாலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா


விழுப்புரம் பாப்பான்குளம் சுந்தர மகாலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் பாப்பான்குளம் சுந்தர மகாலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழுப்புரம்- செஞ்சி சாலையில் உள்ள பாப்பான்குளம் பகுதியில் அங்கையற்கண்ணி சமேத சுந்தர மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 25-ந் தேதி விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து, அன்று திருமகள் வழிபாடு, புற்றுமண் எடுத்தல், முதற்கால வேள்வி, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு ஆகிய நிகழ்ச்சிகளும், நேற்று முன்தினம் இரண்டாம் கால வேள்வி, திருமஞ்சனம், எண்வகை மருந்து அஷ்டபந்தனம் சாற்றுதல், மூன்றாம் கால வேள்வி ஆகியவையும் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகத்தையொட்டி காலை 4.30 மணிக்கு மேல் நான்காம் கால வேள்வி, பேரொளி வழிபாடும், 8 மணிக்கு மேல் நாடிசந்தானமும், 8.30 மணியளவில் கடம் புறப்பாடாகி கோவிலின் விமான கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story