லட்சுமி நரசிம்மபெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி தொடக்கம்


லட்சுமி நரசிம்மபெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி தொடக்கம்
x

லட்சுமி நரசிம்மபெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி தொடக்கம்

திருப்பூர்

சேவூர்

அவினாசி வட்டம் சேவூர் அருகே தாளக்கரை எனும் புனித திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார். பல நூற்றாண்டு பழமை வாய்ந்ததும், திருப்பூர் மாவட்டத்திலேயே தனி சன்னதியாய் நரசிம்மருக்கு இடதுபுறம் மகாலட்சுமி நின்ற நிலையில் அருள்பாலிக்கும் சிறப்புக்குறிய தலமாகவும் தாளக்கரை லட்சுமி நரசிம்மப்பெருமாள் கோவில் விளங்குகிறது. இந்து அறநிலையத்துக்குபட்ட இந்த கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி தொடங்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம், கடந்த 12 -ந்தேதி நடைபெற்றது. இதில் திருப்பணி தொடங்கி விரைவில் கும்பாபிஷகம் செய்வதற்காக, மே 25 -ந்தேதி பாலாலய சிறப்பு பூஜை செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை குடமுழுக்கு திருப்பணி செய்வதற்கான பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஷ்வக்சேன ஆராதனம், புண்ணியாவாசனை, கலச ஆவாஹனம், சுதர்சன ஹோமம், லட்சுமி நரசிம்மர் ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாகுதி, சாற்றுமுறை, மகாதீபாராதனை நடைபெற்று பாலாயம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஊர்பொதுமக்கள், பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகள், கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story