பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்


பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
x

பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

அறந்தாங்கி தாலுகாவில் உள்ள நாகுடியில் ஏரிக்கரையில் வள்ளி-தெய்வானையுடன் பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையடுத்து கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூைஜகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் புனிதநீர் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு மேள தாளம் முழங்க கோவிலை வலம் வந்தனர். பின்னர் காலை 10.30 மணிக்கு பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை நாகுடி மற்றும் அருணாசலபுரம் கிராமத்தார்கள் உள்பட 17 மண்டகபடிதாரர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணிகளில் நாகுடி போலீசார் ஈடுபட்டிருந்தனர்.


Next Story