பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
குன்னூர்
குன்னூர் மவுண்ட் பிளசண்ட் பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்தன. மேலும் விமானம், சிற்பங்கள் ஆகியவைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டது. மண்டபத்தின் முகப்பில் பத்ரகாளியம்மன் சிலை ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் கோவிலில் உள்ள பத்ரகாளியம்மன் மற்றும் மற்ற தெய்வங்களுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமங்கள் நடைபெற்றது.
மேலும் விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், ரக்ஷாபந்தனம் யாக பூஜைகள், மகா பூர்ணாகுதி உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு கோபுர கலச கும்பாபிஷேகம், குருமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஊர் மக்கள் செய்து இருந்தனர்.