கொடுமுடி அருகே பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


கொடுமுடி அருகே பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

கொடுமுடி அருகே பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஈரோடு

கொடுமுடி

கொடுமுடி அருகே கொல்லம்புதுப்பாளையத்தில் காலிங்கராயன் வாய்க்கால் கரையில் விநாயகர், பகவதி அம்மன், கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக செய்ய திருப்பணிகள் நடந்து வந்தது. பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 26-ந் தேதி அன்று இரவு கிராம சாந்தி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 27-ந் தேதி அன்று காலை கணபதி வழிபாடு, ஹோமம் மற்றும் கோ பூஜை நடைபெற்றது. மதியம் பக்தர்கள் கொடுமுடி காவிரி கரையிலிருந்து புனித நீர் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்து அடைந்தனர். மாலையில் முதல் கால பூஜையும், பூர்ணகுதியும் நடந்தது. நேற்று முன்தினம் 2-ம் கால பூஜையும், 3-ம் கால பூஜையும், குதிரை கோபுரம் மற்றும் குதிரைக்கு கண் திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை 4-ம் கால பூஜை நடத்தப்பட்டது. அதன்பின்னர் விமான கோபுரங்களுக்கும், விநாயகர், பகவதி அம்மன் மற்றும் கருப்பண்ண சாமி கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கொடுமுடி ஆதீனம் தண்டபாணி குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.


Next Story