பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில் கும்பாபிஷேகம்


பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்

பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

யாகசாலை பூஜை

பூதப்பாண்டியில் சிவகாமி அம்பாள் உடனுறைய பூதலிங்கசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாஷேகம் நடந்த திருப்பணிகள் செய்யப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், சமய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடந்த 24-ந் தேதி முதல் கால யாக வேள்வி தொடங்கியது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு 4-ம் கால யாக சாலை பூஜை, 5.30 மணிக்கு தீபாராதனை, பூர்ணாகுதி ஆகியவை நடந்தது. நிகழ்ச்சியில் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103-வது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலை வகித்தனர்.

கும்பாபிஷேகம்

காலை 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் எடுத்து வருதல் நடந்தது. தொடர்ந்து மூலஸ்தானம் மற்றும் பரிவார விமான ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம் அலங்கார தீபாராதனை, அன்னதானம் போன்றவை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

எம்.எல்.ஏ.க்கள்

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் தளவாய் சுந்தரம், எம்.ஆர்.காந்தி, முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், துணை தலைவர் லாயம் ஷேக், மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரன், ஒன்றிய கவுன்சிலர்கள் அய்யப்பன், மகாராஜ பிள்ளை, குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள் பூதலிங்கம் பிள்ளை, கரோலின் ஆலிவர் தாஸ், வக்கீல் பிரிவு மாவட்ட துணைச்செயலாளர் கே.எஸ்.பழனி, பூதப்பாண்டி, பேருராட்சி தலைவர் ஆலிவர் தாஸ், துணை தலைவர் அனில்குமார், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் இ.என்.சங்கர், விஷ்வ இந்து பரிசத் நிர்வாகிகள் காளியப்பன், துவரை கார்த்திக், பூதப்பாண்டி பா.ஜனதா பேரூர் தலைவர் நாகராஜன், மத்திய அரசு நலத்திட்ட மாவட்ட செயலாளர் விஜயமணியன், பூதப்பாண்டி பேரூராட்சி கவுன்சிலர் ஈஸ்வரி, மத்திய விளையாட்டு திறன் மேம்பாட்டு செயலாளர் ரெங்கநாதன், ஸ்ரீபாலாஜி மலரகம் முத்துக்குமார், ஓட்டல் பயோனியர் கிராண்ட் பேலஸ் நாகமணி, குமாரசுவாமி, நடராஜன், பயோனியர் ஐ.ஏ.எஸ். அகாடமி குமாரசாமி, பயோனியர் பள்ளி நிர்வாகி லதா குமாரசாமி, ராஜேஷ் தியேட்டர் ராஜேஷ், ஸ்ரீகார்த்திகை தியேட்டர் பரமசிவம், பயோனியர் முத்து மகால் ராம்குமார், ராஜாராம் அன் கோ ராஜ்குமார், டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் கேசவராஜ், அறுபது சுப்பையா, பயோனியர் மோட்டார்ஸ் மணிகண்ட ராஜன், பயோனியர் எக்ஸ்போர்ட்ஸ் சுதாகர், சுவாமிஸ் ராஜா டீதீஸ், காமாட்சி கேபிள் குமாரசுவாமி, ஏ.ஆர்.கே. கண்ஸ்ட்ரக்சன்ஸ் ராஜ்குமார், பயோனியர் டூரிஸ்ட் ேஹாம் ராஜா, பயோனியர் வசந்தம் பேலஸ் நாகமணி, கிருஷ்ணா ஸ்ரீவட்சன், வடசேரி நேசநாயனார் நிறுவன தலைவர் மகாதேவன், ஸ்ரீராம்தேவ் பிளாஸ்டிக் உரிமையாளர் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

விழாவையொட்டி பூதப்பாண்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாலையில் திருக்கல்யாண வைபோக மூகூர்த்தம், இரவு பஞ்சமூர்த்தி உலா வருதல் போன்றவை நடந்தது.


Next Story