பு.சங்கேந்தி கிராமத்தில் துரைகருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம்


பு.சங்கேந்தி கிராமத்தில் துரைகருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம்
x

பு.சங்கேந்தி கிராமத்தில் துரைகருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருச்சி

புள்ளம்பாடி ஒன்றியம் பு.சங்கேந்தி கிராமத்தில் தைலாயி லட்சுமாயி சமேத துரைகருப்புசாமி கோவில் உள்ளது. மேலும் இங்கு விநாயகர், பூர்ண புஷ்பகலா சமேத ஹரிஹரபுத்திரசுவாமி, திருநாபுரத்தார், சப்பாணிகருப்பு, மாசி பெரியண்ணா சாமி, சந்தன கருப்பு, உதிரகருப்பு, மதுரைவீரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. இக்கோவில் சீரமைக்கப்பட்டதையொட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இக்கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. சிகர நிகழ்ச்சியான நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 9.45 மணியளவில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு ் மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை பு.சங்கேந்தி தியாகராஜ குருக்கள், மதுசூதனகுருக்கள் ஆகியோர் செய்தனர். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் செண்பகம் செந்தில்குமார், துணைத் தலைவர் சுதாசெந்தில்குமார் மற்றும் திருப்பணி குழு உறுப்பினர்கள் கேசவன், ஹரி, சுதாகர், மணிகண்டன் உள்ளிட்ட கோவில் குடிப்பாட்டுமக்கள், இ.வெள்ளனூர், குமுளூர், வ.கூடலூர், புள்ளம்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிகுழுவினர்கள், குடிபாட்டுமக்கள் செய்திருந்தனர்.


Next Story