கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

திண்டுக்கல் அருகே என்.பெருமாள்கோவில்பட்டி கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள என்.பெருமாள்கோவில்பட்டி ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி விநாயகர் பூஜை, லட்சுமி யாகம், சுதர்சன யாகம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து புனிதநீர் கோவில் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதி மக்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். முடிவில் அனைவரும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story