ஞானஸ்கந்தன் கோவில் கும்பாபிஷேகம்


ஞானஸ்கந்தன் கோவில் கும்பாபிஷேகம்
x

ஞானஸ்கந்தன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

கரூர்

கரூர் கே.வி.பி. நகரில் அமைந்துள்ள மகா கணபதி, ஞானஸ்கந்தன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இக்கோவிலில் அமைந்துள்ள நிருதிகணபதி, ஆலய கணபதி, சத்ய நாராயணர், ஆஞ்சநேயர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் புதியதாக உற்சவ திருமேனிகள், பைரவர் கொடிமரம், திருத்தேர் போன்ற புதிய திருப்பணிகளுடன் ஆலய விமான திருப்பணிகள் நிறைவடைந்தன. இதனையடுத்து கடந்த 8-ந்தேதி மாலை காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. பின்னர் முளைப்பாரி எடுத்து வந்தனர். தொடர்ந்து முதல் காலயாக பூஜை நடைபெற்றன.

9-ந்தேதி காலை இரண்டாம் காலயாக பூஜையும், மாலை மூன்றாம் காலயாக பூஜையும் நடைபெற்றது. பின்னர் இரவு 7 மணியளவில் கோபுர கலசம் வைக்கப்பட்டது. இரவு 10.30 மணியளவில் யந்திரம் வைத்து அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணியளவில் நான்காம் காலயாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து யாத்ரா தானமும், கடம் புறப்பாடும் நடைபெற்றன. பின்னர் காலை 8.15 மணியளவில் விமான கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து மூலமூர்த்திகள் கும்பாபிஷேகம், தசதானம், தச தரிசனம், கோபூஜை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சேரன் ராஜேந்திரன், கரூர் மத்திய மேற்கு மாநகர செயலாளர் அன்பரசன், கவன்சிலர்கள் ஸ்டீபன் பாபு, சாலை ரமேஷ், அரவிந்த் ஏ-டிரேடர்ஸ் ஜெயராம், தீபா கண்ணன் மருத்துவமனை டாக்டர்கள் ராமசாமி, நரேஷ் கண்ணா, சோலார்டெக் மகாமுனி, நீல் டெக்ஸ் ரவிச்சந்திரன், ஸ்ரீ டிரேடர்ஸ் சிவசெந்தில், ஆடிட்டர் முத்துச்சாமி, அரவிந்த் ஏ-டிரேடர்ஸ் சிவசண்முகம் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் விஷ்ணு ஜூவல்லர்ஸ் சண்முகம், செயலாளர் மணீஸ் டெக்ஸ் மகேஸ்வரன், பொருளாளர் பழனிச்சாமி, பொதுமக்கள், ஞானஸ்கந்தன் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


Next Story