ஜெய்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


ஜெய்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

ஜெய்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை அருகே கங்கரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த எலுமிச்சங்காய்பட்டியில் ஜெய் காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை, 2-வது கால யாகபூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம் உள்பட 11 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story