கனக விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


கனக விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

நெல்லை குறுக்குத்துறை கனக விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை குறுக்குத்துறை எட்டுக்கண்ணூர் கனக விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கடந்த 24-ந்தேதி மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் ஹோம பூஜை தொடங்கியது. மேலும் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 6 மணிக்கு 4-ம் கால பூஜைகள், வேதிகா அர்ச்சனை, வேத பாராயணம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு யாத்திரா தானம், கடம் புறப்பாடு நடந்தது. 9 மணிக்கு விமான கோபுரங்கள், விஷ்ணு துர்க்கை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story