கருமேனி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


கருமேனி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 19 Sept 2023 12:15 AM IST (Updated: 19 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கருமேனி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ராமநாதபுரம்

பரமக்குடி, செப்.19-

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி சாகிபா கவுரி வல்லப ஸ்ரீமத் முத்து விஜய ரகுநாத மதுராந்தகி நாச்சியாருக்கு பாத்தியப்பட்ட சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரண்மனைக்கரை கிராமத்தில் கருமேனி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கு ஆக்கவயல் ராமசாமி தலைமை தாங்கினார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் காளையார்கோவில் சரக கண்காணிப்பாளர் பால.சரவணன், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மேலாளர் இளங்கோ உள்பட தேவஸ்தான பணியாளர்கள், முக்கிய பிரமுகர்கள், அரண்மனைக் கரை கிராமமக்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை கரை கிராம மக்களும், குலதெய்வ வழிபாட்டு மக்களும் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.


Next Story