மாரியம்மன் ேகாவிலில் கும்பாபிஷேகம்


மாரியம்மன் ேகாவிலில் கும்பாபிஷேகம்
x

கீழ் ஆலத்தூர் கிராமத்தில், மாரியம்மன் ேகாவில் கும்பாபிஷேகம் நடந்தது.

வேலூர்

கே.வி.குப்பம் தாலுகா, கீழ் ஆலத்தூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அஷ்டபந்தனை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முன்னிட்டு கணபதி பூஜை, கணபதி ஹோமம், யாக பூஜை, வாஸ்து பூஜை, அஷ்டதிக்கு பூஜை, தீப ஆராதனை, யாக கலச பூஜைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி தீப ஆராதனை காட்டப்பட்டது. அதன்பின் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் அ.தி.மு.க. வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் த.வேலழகன், ஒன்றிய செயலாளர்கள் கே.எம்.ஐ.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. செஞ்சி ஜி.லோகநாதன், வி.ராமு, ஊராட்சி மன்ற தலைவர்கள் மகாலட்சுமி சரவணன், எஸ்.வி.கே.மோகன், வி.ஆர்.சுரேஷ், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் இ.ராமச்சந்திரன், முன்னாள் கவுன்சிலர் வி.முரளி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை விழாக் குழுவினர்கள் ராமமூர்த்தி, சாமிவேல், திராவிடமணி, சேகர், சரத்குமார், மோகன் ஆகியோர், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் உதவியுடன் செய்திருந்தனர்.


Next Story