முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ஆவுடையார்கோவில் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
ஆவுடையார்கோவில் அருகே பில்லுவலசை கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 3 நாட்களாக 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை ராமானுஜம் அய்யங்கார் குழுவினர் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரை தலையில் சுமந்து மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து கோபுர கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள், சுற்றுவட்டார பகுதி மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பில்லுவலசை கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story