நாகம்மாள் கோவிலில் கும்பாபிஷேகம்
கோபால்பட்டி அருகே வி.குரும்பபட்டிநாகம்மாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திண்டுக்கல்
கோபால்பட்டி அருகே வி.குரும்பபட்டி நாகம்மாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விநாயகர் பூஜை, வாஸ்துசாந்தி, வேதபாராயணம், கோபூஜை, கன்யா பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பின்னர் 4-ம்கால யாகபூஜை, காப்புகட்டு நடைபெற்றதை அடுத்து நாகம்மாள் மற்றும் விநாயகர், முருகன், கருப்பணசுவாமி ஆகிய சன்னதிகளில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன் மற்றும் அவரது மகளும் திரைப்பட நடிகையுமான துஷாரா விஜயன் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்.
Related Tags :
Next Story