சுப்பிரமணியசாமி கோவிலில் கும்பாபிஷேகம்


சுப்பிரமணியசாமி கோவிலில் கும்பாபிஷேகம்
x

சாத்தான்குளம் சுப்பிரமணியசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் பஞ்சபிரம்ம அம்பிகை மடம் மற்றும் ீசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகவிழா 3 நாட்கள் நடைபெற்றது.

முதல்நாள் திருமுறைபாராயணம், மகா கணபதி பூஜை, மகாலட்சுமி பூஜை, அனுக்ஞை, சுதர்சன கும்ப பூஜை, மகாகணபதி ஹோமம், கன்னிகா பூஜை, சுமங்கலிபூஜை, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், கும்ப அலங்காரம், முதல் யாகசாலை பூஜை, 2-ஆம் நாள் விஷேடசந்தி, 2-ஆம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை, 3-ஆம்கால் யாகசாலை பூஜை, கும்ப பூஜை நடைபெற்றது. 3-ஆம் நாள் 4-ஆம்கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹிதி, யாத்ராதானம், கடம் புறம்பாடு, விமான கோபுர அபிஷேகம், மூலஸ்தான மூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா திரவிய அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபோகம், மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் பூஷ்பாஞ்சலி, ஸ்ரீசுப்பிரமணியசுவாமி சப்பரபவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.


Next Story