கடலூர் அருகே 41 அடி உயர ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது


கடலூர் அருகே     41 அடி உயர ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம்       நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 9 Sept 2023 12:15 AM IST (Updated: 9 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே 41 அடி உயர ஆஞ்சநேயர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

கடலூரை அடுத்த டி.குமராபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற 41 அடி காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவில் புனரமைக்கப்பட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று காலை மகா சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் மகாபூர்ணாஹதி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் தேவதா பிரதிஷ்டை நடைபெற்றது.

தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) மாலை வாஸ்து சாந்தி ஹோமம், அங்குரார்பணம், வேத திவ்ய பிரபந்தம் தொடக்கம், அக்னி பந்தனம், மகா சாந்தி ஹோமம், முதல் கால யாக பூஜை நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 2-வது கால யாக பூஜை மற்றும் மகா பூர்ணாஹதி நடைபெறுகிறது. பின்னர் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக புறப்பட்டு கும்பாபிஷேகமும் அதைத்தொடர்ந்து பிரபந்த சாற்றுமுறை நடைபெறுகிறது. மாலையில் சீதா ராமர் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்து வருகின்றனர். பூஜைக்கான ஏற்பாடுகள் பார்த்தசாரதி பட்டாச்சாரியார் தலைமையில் நடைபெற்று வருகிறது.


Next Story