தச்சாம்பாடி வரசித்தி விநாயகர், மாரியம்மன், ெசல்லியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
சேத்துப்பட்டு
தச்சாம்பாடி வரசித்தி விநாயகர், மாரியம்மன், ெசல்லியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
சேத்துப்பட்டு அருகே உள்ள தச்சாம்பாடி கிராமத்தில் பழமைவாய்ந்த வரசித்தி விநாயகர், மாரியம்மன், செல்லியம்மன் ஆகிய கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு பஞ்சவர்ணம் பூசப்பட்டு ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி மகாகும்பாபிஷேகம் செய்வது என முடிவு செய்தனர். இதன்படி திருப்பணிகள் முடிக்கப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக கோவிலுக்கு முன்பு பெரிய பந்தல் அமைத்து 108 கலசம் 3 யாககுண்டம் வைத்து விக்னேஸ்வர பூஜை கணபதி பூஜை, லட்சுமி பூஜை, கோ பூஜை உள்பட 3 கால பூஜை நடத்தி தனித்தனியாக உள்ள கோவில் கோபுரத்தின் மீது புனிதநீர் ஊற்றி கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர் கோவிலுக்கு அருகே நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது முன்னதாக மூலவர் சன்னதியில் உள்ள வரசக்தி விநாயகர், மாரியம்மன், செல்லியம்மனுக்கு கும்பாபிஷேக நீரை ஊற்றி அலங்காரம் செய்து வைத்தனர்.இதில் தேவிகாபுரம், சேத்துப்பட்டு, போளூர், நம்பேடு கரிப்பூர் தேவி மங்களம், கார்னம்பாடி, சென்னை, காஞ்சீபுரம், வந்தவாசி, போளூர் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தச்சாம்பாடி கிராம பொதுமக்கள், வரசக்தி விநாயகர், செல்லியம்மன் , திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.