பூதலிங்கசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா
பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
பூதலிங்கசாமி கோவில்
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்கசாமி-சிவகாமி அம்பாள் கோவிலும் ஒன்றாகும். இதுதாடகைமலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடவரை கோவில்.
இந்த கோவிலில் வருகிற 26-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி கொடிமரத்தை சுற்றி செம்பால் ஆன வெண்டயம் புதுப்பிக்கப்பட்டு கொடிமரத்தில் பொருத்தும் பணியும், கொடிமரத்தின் மேல் பகுதியில் நந்திதேவர் கலசம் அமைக்கும் பணியும் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜான்சிராணி, உதவி கோட்ட பொறியாளர் மோகன்தாஸ், கண்காணிப்பாளர் ஆனந்த், ஸ்ரீகாரியம் ஆறுமுகம் நயினார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
யாகசாலை பூஜை
கும்பாபிஷேக விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இதற்காக 27 யாக குண்டம் அமைக்கப்பட்டு உள்ளது. அதிகாலை 5 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜை, மகா கணபதி ஹோமம், தீபாராதனை, காலை 9 மணிக்கு நவக்கிரக பூஜை, நவக்கிரக ஹோமம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு, 8 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை, பிரவேசபலி பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது.
நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு சுதர்சன ஹோமம், கோபூஜை, மாலை 6 மணிக்கு சமயசொற்பொழிவும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு கஜபூஜை, தீபாராதனை, 8 மணிக்கு புனித நீர் எடுத்து வருதல், மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு நடக்கிறது. இரவு 7 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை தொடங்குகிறது. 25-ந்தேதி காலை 8 மணிக்கு 2-ம் யாக சாலை பூஜையும், 10 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதலும், மாலை 6.30 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், இரவு 7மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது.
கும்பாபிஷேகம்
26-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது.. காலை 7.35 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.
அதைத்தொடர்ந்து 10.30 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 7 ்மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசன உலாவும் நடைெ்பறுகிறது.
அமைச்சர்கள்
கும்பாபிஷேகவிழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு, மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மேயர் மகேஷ், மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.