ஆயிரம் வள்ளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


ஆயிரம் வள்ளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x

முதுகுளத்தூர் அருகே ஆயிரம் வள்ளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே பாப்பா பெருங்கருணை கிராமத்தில் ஆயிரம் வள்ளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து கும்பாபிஷேக விழா யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. யாக சாலை பூஜைகளை கொடுமலூர் குமரன் அருள், சிவஸ்ரீ நவநீதகிருஷ்ணன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் இசை வாத்தியங்கள் முழங்க புனித தீர்த்த குடம் புறப்பாடு நடைபெற்றது. அதன்பிறகு விமான கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆயிரம் வள்ளி அம்மன் ஆலய பரிவார தேவதை சாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட 21 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை பெருங்கருணை கிராம நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story