விருத்தாசலம் அருகே 47 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்


விருத்தாசலம் அருகே 47 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே 47 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த ஊத்தங்கால் கிராமத்தில் வள்ளி தெய்வானை உடனுறை தணிகைவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புதிதாக 47 அடி உயரத்தில் முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து முருகன் சிலை மற்றும் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 12-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் நடைபெற்றது.

13-ந்தேதி வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை, 14-ந்தேதி 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜைகளும், நேற்று முன்தினம் 4, 5 மற்றும் 6-ம் கால யாகசாலை பூஜை, மூல மந்திர ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

நேற்று காலையில் தத்துவார்ச்சனை, நாமகர்ணம், யாத்ராதானம் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலகமாக எடுத்து செல்லப்பட்டு, முதலில் 47 அடி உயர முருகன் சிலைக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வள்ளி தெய்வானை உடனுறை தணிகைவேல் முருகனுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி உதயகுமார் தலைமையில் பழனி பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் விழா குழுவினர், அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


Next Story