விநாயகர், முருகர் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம்


விநாயகர், முருகர் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம்
x

சத்துவாச்சாரி கைலாசநாதர் கோவில் விநாயகர், முருகர் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரி பிராமணர் வீதியில் பழமை வாய்ந்த பர்வதவர்தினி சமேத கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட விநாயகர், முருகர், 63 நாயன்மார்களுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி பூஜை, கோ பூஜை, முதல்கால பூஜை, யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் ரத்தினகிரி பாலமுருனடிமை சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

நேற்று காலை 6 மணிக்கு 2-ம் கால பூஜைகள், தீபாராதனை, கடம் புறப்பாடு நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்ப லக்னத்தில் விநாயகர், முருகர், 63 நாயன்மார்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஓச்சேரி மோகனானந்த சுவாமிகள் விநாயகர் சன்னதிக்கு கும்பாபிஷேகம் செய்தார். பின்னர் முருகர் சன்னதி மற்றும் நாயன்மார்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்தி பரவத்துடன் அரோகரா என்று கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். இதில் மேயர் சுஜாதா உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பர்வதவர்த்தினி சமேத கைலசநாதர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள், சத்துவாச்சாரி இளைஞர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story