ரகோத்தமர் கோவில் கும்பாபிஷேகம்


ரகோத்தமர் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 4:01 PM IST)
t-max-icont-min-icon

மணம்பூண்டி ரகோத்தமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டிதென்பெண்ணை ஆற்றின் கரையோரம் ஸ்ரீ ரகோத்தமசாமி பிருந்தாவனம் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்வதால் இது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 1-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு பிருந்தாவனத்தில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. மூலஸ்தானம் மற்றும் கோபுரங்கள் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டும் புதுப்பிக்கப்பட்டும் பெயிண்ட் அடிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு 450-வது ஆராதனை விழா வருகிற 2-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. கும்பாபிஷேகம் மற்றும் ஆராதனை விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


Next Story