27 அடி உயர முனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம்


27 அடி உயர முனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம்
x

ஆண்டியப்பனூர் கிராமத்தில் 27 அடி உயர முனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தாலுகா ஆண்டியப்பனூர் கிராமத்தில் புதிதாக 27 அடி உயர முனீஸ்வர சுவாமி மற்றும் 11 அடி உயர குதிரை சிலைகள், 10 அடி உயரம் உள்ள எதிர்முனி சாமி சிலைகள் புதிதாக கட்டப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 13-ந்் தேதி மங்களள இசை, அனுக்ஞை, விநாயகர் பூஜை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குரார்பணம், முதல்கால யாகபூஜை, யாகவேள்வி, பூர்ணாஹுதி, தீபாராதனை, இரண்டாம் கால யாக பூஜை, யாகவேள்வி, தம்பதிகள் சங்கல்பம், உலக நன்மைக்காக யாக வழிபாடு நடைபெற்றது.

பின்னர் புனித நீர் கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மேள தாளங்களுடன் புனித தண்ணீர் கலசத்தை எடுத்து சென்று முனீஸ்வரன் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. ஜெய் ஜெய் முனிஸ்வரா என கோஷங்களை எழுப்பினர்கள். பின்னர் மூலஸ்தானத்தில் உள்ள முனீஸ்வரர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முனீஸ்வரர் கோவில் நிர்வாகிகள், குலதெய்வ குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்


Next Story