47 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்


47 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கால் 47 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடக்கிறது.

கடலூர்

விருத்தாசலம்:

விருத்தாசலம் அடுத்த ஊத்தங்கால் கிராமத்தில் வள்ளி தெய்வானை உடனுறை தணிகைவேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் மற்றும் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 47 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் பூஜைகள் தொடங்கியது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி உதயகுமார் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், பழனி பாதயாத்திரை பக்தர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து நேற்று காலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்காலயாக பூஜை, தீபாராதனை நடந்தது. இன்று(செவ்வாய்க்கிழமை) மங்கல இசையுடன் காலை 10 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், மாலையில் 3-ம் கால பூஜையும், நாளை(புதன்கிழமை) 4, 5 மற்றும் 6-ம் கால பூஜை நடக்கிறது. நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலையில் தத்துவார்ச்சனை, நாமகர்ணம், 6-ம் கால மகா பூர்ணாஹூதி, யாத்திரதானம், கடம் புறப்பாடு ஆகியவை நடக்கிறது. பின்னர் காலை 10 மணிக்கு 47 அடி உயர முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகமும், காலை 10.20 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story