புதுப்பட்டு மகா காளி அம்மனுக்கு கும்பாபிஷேகம்


புதுப்பட்டு மகா காளி அம்மனுக்கு கும்பாபிஷேகம்
x

புதுப்பட்டு மகா காளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பட்டு முஸ்குந்தா ஆற்றங்கரை அருகே மகா காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு புதிதாக 11 அடி உயரத்தில் மகா காளியம்மன் சிலை நிறுவப்பட்டு, அதற்கான கும்பாபிஷேக விழா கடந்த 14-ந்தேதி மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகளும், நேற்று முன்தினம் முதல் மற்றும் 2-ம் கால பூஜை, மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 11 மணியளவில் கடம் புறப்பாடு நடைபெற்று கோவில் வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட மகா காளியம்மன் சிலைக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story