காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா டி. நாகனி ஊராட்சி 7 கோட்டை நாட்டை சேர்ந்த இளங்குன்றம் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை யொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த யாக சாலையில் ஊருணிக்கோட்டை ராஜாமணி ஐயங்கார், பகவத் பாலாஜி ஆகியோரது தலைமையில் யாக வேள்விகள் நடை பெற்றன. நான்கு கால யாக வேள்விகள் நிறைவு பெற்றதை யொட்டி யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் காமாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது. தொடர்ந்து கருவறையில் மகா அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெற்றது. பின்னர் காமாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்தனர். இளங்குன்றம் கிராமத் தார்கள், குலதெய்வ வழிபாட்டாளர்கள், நிர்வாகி சுப்ரமணியம், கோவில் பூசாரி அழகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவிலை ஊருணி கோட்டை ஸ்தபதி கார்த்திகேயன் வடிவமைத்து இருந்தார்.


Next Story