கருதமடை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்


கருதமடை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 10 March 2023 6:45 PM GMT (Updated: 10 March 2023 6:46 PM GMT)

அழகன்குளம் கருதமடை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

ராமநாதபுரம்

பனைக்குளம்.

மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அழகன்குளம் இந்து சமூக சபைக்கு பாத்தியப்பட்ட பூரண புஷ்கலை சமேத கருதமடை அய்யனார் கோவில் அழகன்குளம் கண்மாய் கரையோரத்தில் உள்ளது. இந்த கோவிலில் பரிவார சன்னதிகள், முன்புற மேற்கூரை திருப்பணிகள் நடைபெற்றன.திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 8-ந்தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. மறுநாள் காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் கருதமடை அய்யனார், ராக்காச்சி அம்மன், அங்காள பரமேஸ்வரிஅம்மன், கருப்பணசுவாமி வழிபடும் அழகன்குளம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபட்டனர். இந்து சமூக சபையின் தலைவர் பாஸ்கரன், உதவி தலைவர் பரமேஸ்வரன், உதவிச்செயலாளர் லட்சுமணன், பொருளாளர் குணசேகரன் மற்றும் இந்து சமூக சபையின் செயற்குழு உறுப்பினர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், அழகன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் அசோகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஏ.சி.ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.


Related Tags :
Next Story