தேவூர் அருகே பாங்கிகாடு அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
தேவூர் அருகே அரசிராமணி பாங்கிகாடு சரபங்காநதி கரையோரம் அமைந்துள்ள அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
சேலம்
தேவூர்:
தேவூர் அருகே அரசிராமணி பாங்கிகாடு சரபங்காநதி கரையோரம் அமைந்துள்ள அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், பஞ்சகவ்ய யாக பூஜை, வாஸ்து பூஜை, பாலிகை பூஜை, 2-ம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து அய்யனாரப்பன், வீரகாரன், முனியப்பன், சப்த கன்னிமார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் அரசிராமணி பாங்கிகாடு, சென்றாயனூர், புளியம்பட்டி, ஒடசக்கரை, செட்டிபட்டி, தேவூர், ஈரோடு சித்தார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story