மழை வேண்டி கொடும்பாவி ஊர்வலம்
தென்னடார் ஊராட்சியில் மழை வேண்டி கொடும்பாவி ஊர்வலம் நடந்தது.
நாகப்பட்டினம்
வாய்மேட்டை அடுத்த தென்னடார் கிராமத்தில் போதிய மழை பெய்யாத காரணத்தினால் விவசாய நிலங்கள் சரியாக விளைச்சல் இல்லை. மேட்டூர் அணையில் இருந்து கடைமடை பகுதியான தென்னடார் கிராமத்திற்கு தற்போது வரை தண்ணீர் வராததால் பஞ்சநதிக்குளம் மேற்கு, கிழக்கு, நடுச்சேத்தி ஊராட்சி, தகட்டூர், ஆயக்காரன்புலம் ஊராட்சி, ஆதனூர் வரை உள்ள பகுதிகளுக்கு மழை பெய்யவில்லை. மழை பெய்ய வேண்டி களிமண்ணில் பொம்மை செய்து (கொடும்பாவி) கட்டி ஊரில் 5 நாட்களுக்கு ஒப்பாரி வைத்து பாடி தென்னடார் ஊரை சுற்றி வந்து பஞ்சநதி குளம், மருதூர்,
ஆயக்காரன்புலம், கருப்பபுலம், பூப்பட்டி வழியாக வேதாரண்யம் கடற்கரைக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கொண்டு சென்று கடலில் கரைத்தனர்.
Related Tags :
Next Story