சேவூர் வாலீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி தொடக்கம்.


சேவூர் வாலீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி தொடக்கம்.
x

சேவூர் வாலீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி தொடக்கம்.

திருப்பூர்

சேவூர்

சேவூர் வாலீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று திருப்பணி தொடங்கப்பட்டது.

அவினாசி அருகே கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் வைப்புத்தலமாகவும், நடுச்சிதம்பரம் என போற்றப்படும் பாடல் பெற்ற தலமாகவும் சேவூர் அறம் வளர்ந்த நாயகி உடனமர் ஸ்ரீவாலீஸ்வரர் திருக்கோவில் விளங்குகிறது.மேலும் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோவில் கடந்த 2004-ம் ஆண்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடப்பது ஐதீகம்.இதையடுத்து கும்பாபிஷேக திருப்பணி தொடங்கும் பொருட்டு செயல் அலுவலர் இரா.சங்கரசுந்தரேஸ்வரன்

முன்னிலையில், பாலாலயம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று மாலை 4

மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி காலகர்ஷனம், கும்ப அலங்காரம், ஹோமம் நடைபெற்றது.மாலை 6 மணிக்கு வேதபாராயணம், வேதிகார்ச்சனை, பூர்ணாகுதி, கலச புறப்பாடு, தர்பணத்தில் (கண்ணாடியில்) கலைகளை ஆவாகனம் செய்தல், நிகழ்வுகள் நடைபெற்று

மஹாதீபாராதனையும், அதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Next Story