குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
திருப்பூர்
திருச்சியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22). இவர் மங்கலம் பகுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 16.5.2022 அன்று கார்த்திக்கை மர்ம ஆசாமிகள் கொலை செய்து அங்குள்ள பாறைக்குழியில் வீசிவிட்டு சென்றனர். இந்த கொலை தொடர்பாக மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரையை சேர்ந்த பாலசந்தர் (35), கழுகுமலையை சேர்ந்த ரஞ்சித் (33), மதுரையை சேர்ந்த மாலிக்பாட்சா (27) ஆகியோரை கைது செய்தனர்.
இதில் ரஞ்சித், பாலச்சந்தர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் வினீத் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் 2 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். அதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் இருக்கும் அவர்களிடம் வழங்கப்பட்டது.
----
Next Story