விநாயகர் சிலை ஊர்வலம்


விநாயகர் சிலை ஊர்வலம்
x
திருப்பூர்


திருப்பூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூர் மாநகரில் இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் நேற்று காலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பெரிச்சிப்பாளையம், காங்கேயம்பாளையம் புதூர் ஆகிய 2 இடங்களில் அந்த பகுதி பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. பின்னர் நேற்று மாலை அந்த விநாயகர் சிலைகள் நான்கு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பி.ஏ.பி. வாய்க்காலில் கரைக்கப்பட்டது. தெற்கு போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் பொன்காளியம்மன் கோவில், அஞ்சலக வீதி, வடுக பாளையம், உள்ளிட்ட இடங்களில் 100-க்கும்மேற்பட்ட விநாயகர் சிலைகள், பிரதிஷ்டை செய்யப்பட்டது.

குன்னத்தூர், கருமஞ்சரை, சின்ன காட்டுவளவு, பெரிய காட்டுவளவு, வேலம்பாளையம், கருங்கல் மேடு, ஆனந்தபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பகுதியில் விநாயகர் வைத்து பூஜை நடைபெற்றது. பின்னர் அந்த சிலைகளை கரைப்பதற்காக பவானி ஆறு மற்றும் பெரிய வாய்க்காலிலுக்கு ஊர்வலமாக எடுத்து கரைத்தனர்.

சேவூர்

சேவூர், சக்தி விநாயகர் கோவிலில் விநயாகருக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. இதே போல் பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பெருமாநல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குள் 36 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பெருமாநல்லூரிலுள்ள, வீதிகாடு, செல்வ விநாயகர் கோவிலில், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, யானை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


Next Story