குன்றத்துகுமரன் பூப்பல்லக்கில் ஊர் திரும்பினார்
பிட்டு திருவிழாவில் பங்கேற்க மதுரைக்கு சென்ற குன்றத்து குமரன் பூப்பல்லக்கில் புறப்பட்டு ஊர் திரும்பினார்.
திருப்பரங்குன்றம்,
பிட்டு திருவிழாவில் பங்கேற்க மதுரைக்கு சென்ற குன்றத்து குமரன் பூப்பல்லக்கில் புறப்பட்டு ஊர் திரும்பினார்.
பிட்டுக்கு மண்சுமந்த லீலை
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா நடைபெற்றது. விழாவின் முத்தாய்ப்பாக கடந்த 6-ந்தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 5-ந் தேதி காலையில் திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து பாண்டிய மன்னனாக முருகப்பெருமான் புறப்பட்டு மதுரைக்கு சென்றார்.இதனையொட்டி அன்று திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை வரையிலுமாக வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திருக்கண் அமைத்து முருகப்பெருமானை வரவேற்று தரிசனம் செய்தனர்.
பூப்பல்லக்கில் ஊர் திரும்பினார்
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி முருகப்பெருமான் பீட்டுக்கு மண் சுமந்த நிலையில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் நேற்று மாலை 5 மணி வரை மதுரையில் தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நிலையில் மாலை 5 மணியளவில் மேளதாளம் முழங்க சர்வ அலங்காரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் பூப்பல்லக்கில் அமர்ந்து ஊருக்கு புறப்பட்டார். இதனையொட்டி மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் வரையிலுமாக வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திருக்கண் அமைத்து வழிபட்டனர். இரவில் முருகப்பெருமான், தெய்வானையுடன் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தார். இதே போல மாணிக்கவாசகரும் மதுரையில் இருந்து திருவாதவூர் புறப்பட்டு சென்றார்.