பாசன வாய்க்காலில் குப்பைகள்
திருப்பூர்
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன திட்டத்தின் கீழ் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டம் வரை பாசனத்திற்காக வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது, திறந்து விடப்படும் நீரின் மூலம் விவசாயிகள் நெல், கரும்பு, கடலை மற்றும் காய்கறி வகைகள் பயிர் செய்தும் கால்நடைகள் வளர்த்தும் பயனடைந்து வருகின்றனர். பாசன வாய்க்காலில் குப்பைகள், மதுபாட்டில்கள் மற்றும் செத்துப்போன கோழிகள் ஆடு, மாடு ஆகியவற்றை வீசி விடுகின்றனர். இதனால் விவசாய நிலங்களின் மண்வளம் கெடுகின்றன. இந்த நீரை குடிக்கும் கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகின்றன. வாய்க்கால் நீர் பொதுமக்கள் பயன்படுத்தும் கிணறுக்கு செல்கின்றது. கிணற்றிலிருந்து நீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் நோய் தொற்று ஏற்பட அபாயம் உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
Next Story