குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனி கொடை விழா
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனி கொடை விழா செவ்வாய்க்கிழமை கால்நாட்டுதலுடன் தொடங்குகிறது.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கொடை விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான கொடை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கால் நாட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கொடை விழா ஜூலை 12-ந்தேதி நடைபெறுகிறது.
விழாவிற்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வா். இன்று முதல் பக்தர்கள் விரதத்தை தொடங்குவர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர், சுகாதார வசதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார ஏற்பாடுகளை தென்திருப்பேரை ஆரம்ப சுகாதார நிலையமும், குரங்கணி பஞ்சாயத்தும், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் ஆழ்வார்திருநகரி போலீசாரும் செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் இசக்கியப்பன் மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.