குறிஞ்சி இனமக்கள் எழுச்சி கழக ஆலோசனை கூட்டம்
பேராவூரணியில் குறிஞ்சி இனமக்கள் எழுச்சி கழக ஆலோசனை கூட்டம் நடந்தது.
தஞ்சாவூர்
பேராவூரணி:
பேராவூரணியில் குறிஞ்சி இனமக்கள் எழுச்சிக்கழகத்தின் மாநில ஆலோசனைக் கூட்டம் நிறுவன தலைவர் வக்கில் உத்தமகுமரன் தலைமையில் நடந்தது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் வீரமணி, மாநில துணை செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழகத்தில் பழங்குடி மக்கள் கல்வி அறிவு பெற அரசு சாதி சான்று தர வலியுறுத்தியும், பழங்குடி மக்களை துப்புரவு பணிக்காக மட்டுமே பயன்படுத்தி வருவதை கண்டித்தும் நீண்ட நடைபயணம் நடத்துவது, தஞ்சை மாவட்டத்தில் வசித்து வரும் குறவர் மற்றும் மலைக்குறவர் மக்களுக்கு மாவட்ட கலெக்டர் இலவச வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் பல்வேறு மாவட்டங்களைச்சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story