குரும்பூர் நாடார் வியாபாரிகள் இளைஞர் ஐக்கிய சங்க நிர்வாகிகள் தேர்வு
குரும்பூர் நாடார் வியாபாரிகள் இளைஞர் ஐக்கிய சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி
தென்திருப்பேரை:
குரும்பூரில் வட்டார நாடார் வியாபாரிகள் இளைஞர் ஐக்கிய சங்க கூட்டம் தலைவர் கிஷோக் முருகானந்தம் தலைமையில் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. வரும் ஆண்டிற்கான தலைவராக கிஷோக் முருகானந்தம், செயலாளராக எட்வர்டு யோசுவா, பொருளாளராக மகேஷ், துணைத் தலைவராக செல்வகுமார், துணைச் செயலாளராக லிங்கதுரை ஆகியோர்களும் கவுரவ ஆலோசகர்களாக ரமேஷ்குமார், திருஞானம், பாஸ்கர் ஆகியோர்களும் நிர்வாகிகளாக அன்சில்ராஜ், கண்ணன், சாமத்துரை, ராபர்ட், பொன்லிங்கம், இசக்கிமுத்து, காளிமுத்து, நவரத்தினம், முத்துக்குமார் ஆகியோரும் சங்க கணக்கராக ரவிச்சந்திரனும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு பொதுமக்களும், வியாபாரிகளும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story